Advertisement

Advertisement

Advertisement

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள 'வெள்ளையானை'

by Xappie Desk | June 13, 2019 11:42 IST
சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள 'வெள்ளையானை'

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள 'வெள்ளையானை'
 
இயக்குனர் சுப்ரமணியம் சிவா 2003 ல் இயக்குனராக அறிமுகமானார் .நடிகர் தனுஷ் அவர்களை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படமான திருடா திருடி சூப்பர் ஹிட் திரைப்படம் . அதனை தொடர்ந்து பொறி , யோகி , சீடன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை ,அசுரன் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார் .தற்போது இவர் நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனியை வைத்து இயக்கியுள்ள படம் வெள்ளையானை.
 
இந்த வெள்ளையானை திரைப்படத்தை "WHITE LAMP TALKIES " தயாரிப்பு நிறுவனம் சார்பில் S .வினோத் குமார் தயாரிக்கிறார் . இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார் .ஆத்மியா தமிழில் மனங்கொத்தி பறவை எனும் படத்தில் அறிமுகமாகினார் .
 
முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,'சாலை ஓரம் ' ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .
 
இந்த உலகத்தில் உள்ள அனைத்து உரினங்களும் உணவை சார்ந்து இருக்கிறது . உணவு விவசாயத்தையும் , விவசாயியையும் சார்ந்து இருக்கிறது . விவாசாயம் நீரை சார்ந்துள்ளது .விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீரையும் , கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா.
 
படத்தொகுப்பு - AL ரமேஷ் , கலை இயக்கம் ஜெகதீசன் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த விஷ்ணு ரங்கசாமி இப்படத்திர்ற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனின் தம்பி தினேஷ் சுப்பராயன் மேற்கொண்டுள்ளார் . இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
 
தொழில்நுட்பக்குழு : எழுத்து -இயக்கம் : சுப்ரமணியம் சிவா தயாரிப்பு - S .வினோத்குமார் கலை இயக்கம் - ஆ .ஜெகதீசன் ஒளிப்பதிவு - விஷ்ணு ரங்கசாமி சண்டைப்பயிற்சி -தினேஷ் சுப்பராயன் ஆடை வடிவமைப்பு - நாகு மேக்கப் - A .சரவணகுமார் , B. ராஜா விளம்பர வடிவமைப்புகள் - சசி & சசி மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மது


Advertisement


Advertisement

Top