தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் 'கதிர்'

By Xappie Desk, May 02, 2019 09:46 IST

தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் 'கதிர்'

தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் 'கதிர்'
 
‘அது இது எது’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, இன்று வெள்ளித்திரையின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் காமெடியன் கதிர்
 
மிமிக்ரி ஆர்டிஸ்டாக வாழ்வை துவங்கி, சின்னத் திரையில் தனது நகைச்சுவையின் மூலம் மக்களை பல ஆண்டுகள் சிரிக்க வைத்து, அந்த அனுபவத்தில் தனது திறமைகளையும் வளர்த்து கொண்டு, வெள்ளித்திரைக்கு தன்னை உயர்த்தி இருக்கிறார் காமெடியன் கதிர்.
 
‘அது இது எது’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, காமெடிக்கு நாங்க கியாரண்டி உள்ளிட்ட பல சின்னத் திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி, மக்களை கவலை மறந்து சிரிக்க வைத்த கதிர், தற்போது வெள்ளித்திரையிலும் தனது முத்திரைய பதிக்க துவங்கி விட்டார்.
 
திமிரு பிடிச்சவன், தாதா 87, ஜித்தன் போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது விஜய் ஆண்டனியோடு ‘தமிழரசன்’, சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, யோகி பாபு அசத்தும் ‘ஜாம்பி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 
‘வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் கடினமாக உழைக்க வேண்டும்’ என்பதற்கு மாறாக, மற்றவர்களை சிரிக்க வைத்தும் முன்னேறலாம் என கூறும் வகையில் இங்கு நம்முன் உயர்ந்து நிற்கிறார் காமெடியன் கதிர்.


Forum Topics


Top