கேப்டன் விஜயகாந்த், சண்முகப்பாண்டியன் நடிக்கும் மித்ரன் படத்தின் படப்பிடிப்பை துவங்கி வைத்தார்
கேப்டனின் இளையமகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் மித்ரன் தி காப் படத்தை சிறுத்தை சிவாவிடம் இணைஇயக்குநராக பணியாற்றிய பூபாலன் இயக்குகிறார்.இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் சண்முகப்பாண்டியன் நடிப்பதால் எதிர்பார்ப்பு எகிற தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் சயன கோலத்தில் காட்சியளிக்கும் காஞ்சி ஆதி அத்தி வரதரின் பாதத்தில் வைத்து அவரது ஆசிர்வாதத்தை பெற்றது மித்ரன் திரைப்படக்குழு.இதனையொட்டி சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி கரையிலுள்ள பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் மித்ரன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதனையொட்டி அங்கு நடைபெற்ற சிறிய பூஜைக்கு பின்னர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த். ஆக்சன் சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
Breath
படப்பிடிப்பு துவங்கியதையொட்டி அங்கிருந்த படக்குழுவினருக்கு இனிப்புகள் வழங்கி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.இந்த நிகழ்வின் போது கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
முன்னதாக படப்பிடிப்புதளத்தில் குவிந்த சண்முகப்பாண்டியனின் ரசிகர்கள் அவருக்கு மாலைஅணிவித்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்