உலகிலேயே மிகப் பழமையான மொழியாக தமிழ் திகழ்கிறது என்று கூறிய பிரதமர் மோடியை கொண்டாட தெரியாதவன் தமிழன், நன்றி மறந்தவன் தமிழன் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தொன்மையான மொழி பேசும் தமிழர்கள் நன்றி உடையவர்களாக தான் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்