தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாணவர்களுடன் கலந்துரையாடினார்/ பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஓராண்டில் தென்னிந்தியாவில் 1 புள்ளி 2 சதவீதம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1 புள்ளி 2 சதவிகிதம் குறைந்துள்ளது என்றார். குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் 727 மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடுமுழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான நடக்கும் குற்றங்கள் மட்டுமே சமூக வலைதளங்கள் மூலமாக வெளியே வருவதாக கூறிய ஆனந்த், அந்தக் குற்றங்கள் மீதான ஆணையம் மற்றும் அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் வெளியில் வருவதில்லை என்று அதிருப்தி தெரிவித்தார்.