ஏசி சண்முகம் வெற்றி பெறுவது உறுதி - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
குடியாத்தத்தில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமதி பிரேமலதா விஜயகாந்த், திமுக வேட்பாளரின் பண பட்டுவாடாவால் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார். வேலூர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏ.சி சண்முகம் வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு கேப்டன் வருவார் என கூறிய பிரேமலதா, தானும், விஜயபிரபாகரனும் தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்