பாலியல் புகார் முகிலனை 15 காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
கடந்த 142 நாட்களாக மாயமாகி இருந்த முகிலனை திருப்பியில் இருந்து சிபிசிஐடி போலீசார், சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, முகிலன் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முகிலன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜய் கார்த்திக் முன்னிலையில் முகிலனை நேற்றிரவு ஆஜர்படுத்த கொண்டு சென்றனர். அப்போது முகிலனை வீடியோ எடுக்க வந்த பத்திரிக்கையாளர்களை 100 மீட்டர் முன்னதாக தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும் பத்திரிக்கையாளர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது