தாராபுரத்தில் பொள்ளாச்சி சாலையில் உள்ள நகைக்கடைக்கு பர்தா அணிந்த 2 பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து தங்களிடம் உள்ள 5 சவரன் தங்க சங்கிலியை விற்பனை செய்ய வேண்டும் எனக்கூறி விற்பனையாளர்களிடம் கொடுத்துள்ளனர்.
நகையை பரிசோதனை செய்து எடை போட்ட விற்பனையாளர் அதற்குரிய தொகையை கூறியுள்ளார். இதற்கிடையே கடையில் இருந்த தங்க செயினை எடுத்து கொண்டு போலி செயினை மாற்றி வைத்து விட்டனர்.
இச்சம்பவம் நகைகடையிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதை அறிந்த விற்பனையாளர் போலியான கவரிங் செயினை உரசிப் பார்த்து ஆய்வு செய்தபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது தங்களது மோசடி செயல் வெட்ட வெளிச்சமானதும் மோசடி பெண்கள் தப்பி ஓட முயன்றிள்ளனர். ஆனால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இருவரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து தாராபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த தாராபுரம் போலீசார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் நீதிபதி உத்தரவுப்படி 15 நாள் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பொள்ளாச்சி சாலையில் இரண்டு பெண்கள் பர்தா அணிந்து மாறுவேடமிட்டு துணிச்சலாக வந்து போலி நகையை கொடுத்து மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.