உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காாலை வந்து கொண்டிருந்த போது, நிலைதடுமாறி பாலத்தின் மீதிருந்த தடுப்பின் மீது மோதியது.. பின்னர் கீழே இருந்த கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 29பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 17பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தை வேகமாக இயக்கியாதாலேயே, இவ்விபத்து காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. உத்தரபிரதேச சாலை போக்குவரத்து கழகம் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்து கொண்டுள்ளார்